இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையான சிறுமி :இளைஞன் செய்த மோசமான செயல்

rtjy 20 scaled
Share

போதைக்கு அடிமையான சிறுமி :இளைஞன் செய்த மோசமான செயல்

குருநாகல் – கொஹிலகெதர பிரதேசத்தில் இளைஞன் ஒருவரால் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

15 வயது சிறுமியின் வீட்டிற்கே சென்று 17 வயது சிறுவன் பலமுறை பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞன் அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வந்து, வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.

கடுமையான பாலியல் வன்புணர்வுற்கு ஆளான சிறுமி கசிப்பு என்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், அவரது அத்தையும் போதைப்பொருள் பாவனையாளர் எனவும், இதன் காரணமாகவே சிறுமி போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுமியை குருநாகல் போதனா வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

சிறுவனின் இந்தச் செயற்பாடுகளை சிறுமியின் வீட்டில் வசித்த பாட்டியும் அவரது சகோதரியும் கண்டதையடுத்து, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த நிலையில் சிறுமி வீட்டில் சிறுவன் விட்டு சென்ற ஆடைகளை விசாரணைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...