me 2 e1653838078428
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொழும்பில் மருத்துவபீட மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை வீச்சு!

Share

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்குத் தீர்வு காணுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகாமையில் இருந்து நாட்டின் பல பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மருத்துவபீட மாணவர்களின் போராட்டம் ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு மருதானை, டெக்னிக்கல் சந்தி வழியாக புறக்கோட்டையை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

இதையடுத்து குறித்த மாணவர்கள் அங்கிருந்து ஜனாதிபதி மாளிகையை நோக்கிச் சென்ற நிலையில் கொழும்பு உலக வர்த்தக மையப் பகுதியை அண்மித்த பகுதியில் பொலிஸார் வீதித்தடைகளைப் போட்டு ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தடையேற்படுத்தினர்.

இதனால் அங்கு குழப்ப நிலை உருவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு குறித்த ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டது. இதன்பின்னர் அப்பகுதியில் சிறுது நேரம் பதற்ற நிலைமை நீடித்தது.

me 1 e1653838030888

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...