பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்காமல் கல்வி அமைச்சின் செயலாளர் ஊடக சந்திப்புகளில் முரண்பாடான தகவல்களை கூறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாடசாலைகளை திறந்து நடைமுறை ஆய்வுகளை நடத்துவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பிய அவர், முதலில் எமது பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு கல்வி அதிகாரிகள் முறையான முடிவை எடுப்பார்களென்று நான் நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment