ஜனாதிபதி, பிரதமரைப் பதவி விலகக் கோரி ஆசிரியர்கள் நாளை வேலைநிறுத்தம்!

பொன். உதயரூபன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் ஒரு வாரத்துக்குள் பதவி விலகக் கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளது.

இந்தத் தகவலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன். உதயரூபன் தெரிவித்தார்.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பில் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணத்தால் விடுமுறை தொடர்பில் எந்தவித அறிவுறுத்தல்களும் வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version