ஆசிரியர் தற்காலிக இடமாற்றங்கள் ரத்து!!

Education 2

தொற்றுநோய் பரவல் மற்றும் நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு 2022 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் மார்ச் 24 க்குப் பின்னர்  நீடிக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் நெருக்கடியான காலகட்டத்தில், பயணம் மற்றும் போக்குவரத்தில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் நிவாரணம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அதற்கமைய அவர்கள் வசிக்கும் பிரதேசத்துக்கு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள்  தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர் என்றும் மார்ச் 24 ஆம் திகதிக்கு பின்னர் இந்த நியமனங்கள் நீடிக்கப்படமட்டாது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான அறிவிப்பு சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு விடுக்கப்படும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version