12 6
இலங்கைசெய்திகள்

புல்மோட்டையில் இரத்தக் காயங்களுடன் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு..!

Share

புல்மோட்டையில் இரத்தக் காயங்களுடன் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு..!

புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (06) மாலை பாடசாலையில் அவர் தங்கியிருந்த அறையில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (06) புதன்கிழமை காலை பாடசாலை வரவுப் பதிவு இயந்திரத்தில் வருகையைப் பதிவு செய்த பின்னர் இவர் வகுப்பறைகளுக்குச் சென்று காலை 10.30 மணி வரை பாடம் நடத்தியுள்ளார்.

இதன்போது அவர் தனது இடமாற்றம் தொடர்பாகக் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்கத் திருகோணமலை நகருக்குச் செல்லவுள்ளதாக மாணவர்களுக்குக் கூறியுள்ளார்.

எனினும், நேற்றுப் பிற்பகல் பாடசாலை முடிவடைந்த பின்னர் மாலை 3.30 மணிவரை வெளியேறுவதற்கான பதிவை இயந்திரத்தில் இவர் பதிவு செய்யவில்லை.

இதேவேளை, குறித்த ஆசிரியரது மனைவி தமது கணவருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் பதில் எதுவும் இல்லாத நிலையில் பாடசாலை அதிபருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வினவியுள்ளார்.

இதையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மேற்படி ஆசிரியர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்வையிட்டபோது அவர் உயிரற்ற நிலையிலும் கால்களில் இரத்தக் காயங்களுடனும் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதவானின் உத்தரவுக்கு இணங்க சடலம் சட்ட வைத்திய மரண பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...