tamilni 332 scaled
இலங்கைசெய்திகள்

ஆசிரியர் – அதிபர் போராட்டம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

Share

ஆசிரியர் – அதிபர் போராட்டம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

பத்தரமுல்லை – பெலவத்தையில் நடைபெற்ற ஆசிரியர் – அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஆசிரியர் – அதிபர் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியிருந்த நிலையில் அதில் பலர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனது கவலையை குறித்த அறிக்கையில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், முரண்பாடுகளை தீர்க்க ஆசிரியர் – அதிபர் உள்ளிட்ட கல்வித் துறைகள் செயற்படும் வேளையில் மாநாடு ஒன்றுக்காக கல்வி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், இடம்பெற்ற இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 9
செய்திகள்இலங்கை

நாளை மிரிஹானை பொதுக்கூட்டத்தால் போக்குவரத்து மாற்றம்: மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தல்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (நவம்பர் 21) நண்பகல் நடைபெறவுள்ள...

japan sri lanka flags
செய்திகள்இலங்கை

5000 ஜப்பானிய மொழிப் பயிற்சியாளர்கள்: இலங்கையில் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டம்!

2026ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழாத்தை...

25 691f13e047667
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் நகர மண்டபத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது!

மாவீரர் வாரத்தையொட்டி, மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் உறவினர்களை ஒன்றிணைத்து, அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று...

images 3 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்திய சூரியசக்தித் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் ஆவேசம்: கோரிக்கைகள் நிறைவேறாததால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடும்பாவிகளை எரித்து போராட்டம்!

தமது கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத நிலையில், முத்துநகர் விவசாயிகள் இன்று (நவம்பர் 20, 2025) தகரவெட்டுவான்...