அரச ஊழியர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடங்களில் வழங்கப்படும் சில பணமல்லா சலுகைகளுக்கு, உழைக்கும்போது செலுத்தும் புதிய வரி முறைமையில் இருந்து விலக்கு அளிக்கும் சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடங்களில் வழங்கப்படும் வாகனங்கள், எரிபொருள் கொடுப்பனவுகள், வீடுகள் மற்றும் மருத்துவப் பலன்கள் போன்ற பணமில்லாப் சலுகைகளுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்துவதில் இருந்தே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பேரில் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இந்த சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை (07) வெளியிடப்பட்டது.
2013 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஊழியரின் ஆதாயங்கள் மற்றும் இலாபங்களை சுற்றறிக்கை கணக்கிடுகிறது.
#SriLankaNews