பிபிலைப் பகுதி கூட்டுறவு வங்கியொன்றின் பெண் முகாமையாளர், இனந் தெரியாத நபரொருவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிபிலைப் பகுதியைச் சேர்ந்த ஹெவல்வெல கூட்டுறவு வங்கியின் முகாமையாளரான வசத்தி நிலூசியா ஆரியவன்ச என்பவரே, இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட பெண் முகாமையாளர் கடமையிலிருக்கும் போது முகமூடியணிந்த நபரொருவர் வங்கிக்குள் நுழைந்து, கத்தியொன்றினால் முகாமையாளரின் மார்புப் பகுதியில் குத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளார்.
உடனடியாக அம் முகாமையாளர் பிபிலை வைத்தியசாலைககு கொண்டு செல்லப்பட்டார். இவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews