இலங்கைசெய்திகள்

மாவீரர்களை நினைவேந்த தமிழருக்கு உரிமை உண்டு – அநுர அரசு பதிலடி

1
Share

மாவீரர்களை நினைவேந்த தமிழருக்கு உரிமை உண்டு – அநுர அரசு பதிலடி

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் மீண்டும் பிரிவினைவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்க வேண்டிய தேவை வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்குக் கிடையாது.

தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்துள்ளார்கள்.

இந்த அரசில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதான பங்காளிகளாக உள்ளனர். அனைத்து இன மக்களின் ஒத்துழைப்புடன் சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம்.

வடக்கு, கிழக்கில் மாவீரர் தினத்தைத் தமிழ் மக்கள் அனுஷ்டிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, இனவாதத்தை முன்னிலைப்படுத்தி தெற்கில் அரசியல் செய்யும் தரப்பினர் வீணாக அச்சமடையத் தேவையில்லை என  வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...