ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களுக்கு ஆர்வம் இல்லை! விக்னேஸ்வரன்
ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களுக்குக் காணப்படும் ஆர்வம் தமிழ் மக்களுக்கு இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் (C.V. Vigneshwaran) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (07.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல தரப்பினரதும் கருத்துக்களைப் பெற வேண்டும்.
இவ்வாறு கருத்துக்கள் பெறப்பட்ட பின்னரே தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.