25 683afaad6bb47
இலங்கைசெய்திகள்

தோட்ட அதிகாரிகளால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞன்: நடவடிக்கை எடுக்குமாறு மனோ எம்.பி. வலியுறுத்து

Share

ஆலயச் சிலை பீடத்தில் பாதணியுடன் காலைத் தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன தமிழ் இளைஞரை கொச்சைத் தமிழில் திட்டி இரண்டு தோட்ட வெளிக்கள அலுவலர்கள் தாக்கியுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஆலயச் சிலை பீடத்தில் பாதணியுடன் காலைத் தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை நீ கும்பிடுவது, சிலையின் தலையா, காலையா, உங்கட சாமி தலையிலயாடா காலை வைத்தோம்” என கூறி தோட்ட அதிகாரிகள் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த தகவலை எமது அவிசாவளை புவக்பிட்டிய அமைப்பாளர் சசிக்குமார் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இது பற்றி உறுதியான மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அவிசாவளை பொலிஸிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன, நிலையப் பொறுப்பதிகாரி ஜெயலத், இளநிலை அதிகாரி ராஜரத்ன ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன்.அவர்களும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர்.

தற்சமயம் காயமடைந்த கமலநாதன் இமேஷ்நாதன் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலின் உயிர்நிலை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.

கமலநாதனைத் தாக்கிய, சந்தேக நபர்கள் இருவரும், மிகவும் சூட்சுமமான முறையில் தாமும் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி, அதே அவிசாவளை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகக் கூறி தங்கியுள்ளார்கள். இது பற்றியும் நான் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...