ஆஸ்திரேலியாவில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழப்பு!

WhatsApp Image 2022 07 07 at 3.42.02 PM

ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ரட்ணசிங்கம் பரமேஸ்வரன் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்துள்ளார்.

48 வயதான அவர் இன்று காலை தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என தமிழ் அகதிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அவர், மேன்முறையீட்டு வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திய நிலையிலேயே ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தார்.

இதேவேளை, ரட்ணசிங்கம் பரமேஸ்வரனின் 25 வயதான மகனும் மனைவியும் இலங்கையில் வசிக்கின்றனர்.

நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றின் கூட்டுவிளைவாக அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version