டலஸுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஆதரவு!

Dullas Alahapperuma

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

மக்களின் கோரிக்கையை ஏற்று சர்வக்கட்சி அரசு அமைப்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் என்பனவும் டலசுக்கு ஆதரவு வழங்கவுள்ளன.

#SriLankaNews

Exit mobile version