தமிழ் கட்சிகள் – அமெரிக்க தூதர் சந்திப்பு

WhatsApp Image 2022 04 26 at 9.41.01 AM

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்றையதினம் அமெரிக்கத் தூதுவர் ஐீலி சுங்கை சந்தித்து கலந்துரையாடினர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர்க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோரே இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நிலையில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

#SriLankaNews

Exit mobile version