rtjy 35 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை சூறையாடியவர்களுக்கு இலங்கையின் நீதித்துறை சுதந்திரம் வழங்கியுள்ளது

Share

நாட்டை சூறையாடியவர்களுக்கு இலங்கையின் நீதித்துறை சுதந்திரம் வழங்கியுள்ளது

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜா தொடர்பில் அவர் இன்று(03.10.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கையின் நீதித்துறை சிங்கள பெளத்த மேலாதிக்கத்திற்கும், அதே மேலாதிக்கத்தின் பெயரால் நாட்டை நாசம் செய்தவர்களையும் சூறையாடியவர்களையும் கொலையாளிகளையும் சுதந்திரமாக நடமாட வைத்துள்ளது.

இந்த விடயங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் சம்பவமாக நீதிபதி சரவணராஜாவின் சுயாதீன செயற்பாட்டுக்கு இடையூறான சட்டமா அதிபரின் தலையீடு மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் அமைந்திருந்தன.

இலங்கையின் நீதித்துறையில் அரசியல் தலையீடு, சிங்கள – பெளத்த தேசத்தின் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

இதன் காரணமாகவே இலங்கையின் அரசால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்புக்கும் நடைபெற்றுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கும் சர்வதேச நீதி விசாரணையை எமது அரசியல் இயக்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

இலங்கையின் அரச கட்டமைப்பு, நீதி கோரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் அதற்காகக் குரல் கொடுத்த சட்டத்தரணிகளையும் அச்சுறுத்தி வந்ததன் தொடர்ச்சியாக இன்று நீதிபதிக்கே அச்சுறுத்தல் விடுத்து தீர்ப்பை மாற்றக் கோரும் அளவுக்கு மோசமாகச் செயற்பட்டிருக்கிறது.

இந்த மோசமான நிலைமைக்கு எதிராகத் தமிழ் மக்கள் எழுச்சியடைய வேண்டும். இதற்கான நீதி கோரிய போராட்டங்களில் தமிழ் மக்களைக் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...