7 10
இலங்கைசெய்திகள்

அதிரும் தமிழக திரைத்துறை..! தொடரும் கைது நடவடிக்கைகள்

Share

தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், தென்னிந்திய திரைத்துறையில், போதைவஸ்து பாவனை தொடர்பில், பல முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சர்வதேச போதைப்பொருள் விநியோகஸ்தர் என்று கருதப்படும் சென்னையை சேர்ந்த, கெவின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் திடுக்கீடும் தகவல்களை வழங்கியுள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில், நடிகர் கிருஸ்ணா அத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதில், தாம் முழு நேர தொழிலாக ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கெவின், விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தமக்கு ஜெய்வீர் என்ற புனைப்பெயர் இருப்பதாக கூறியுள்ள அவர், தென்னிந்திய திரைத்துறையினர் தம்மை பவுடர் ஜெஸ்வீர் என்றே அழைப்பர் என்றும் கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நடிகர் – நடிகையரை விட, சினிமா பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்களே தமது வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நடிகர் – நடிகையர் பிறந்த நாள் நிகழ்வுகள், படங்களின் வெற்றி விழா கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளுக்காகவும் தாம் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நெருங்கிய நண்பரான நடிகர் கிருஸ்ணா அடிக்கடி அவரது நண்பர்களுக்கு விருந்து வழங்குவார் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இரவு நேர தூக்கம் தொலைத்து பணிபுரியும் மென்பொருள் நிறுவன ஊழியர்களும், கொக்கைன் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் கொக்கைனை விற்றுள்ளதாக கெவின் தகவல் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில், கெவின் வழங்கியுள்ள இந்த வாக்குமூலம் தற்போது தென்னிந்திய திரைத்துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் காலத்தில் பல நடிகர்கள், இயக்குநர்கள் விசாரணைகளுக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...