அநுர உரையாற்றவிருந்த மேடையை படம் பிடித்த தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி

15 2

கொழும்பில் காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட மேடையை படம் பிடித்ததாக கூறப்படும் ஒரு தமிழ் இளைஞர் நேற்று கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவிருந்த மே தினக் கூட்டத்திற்காக இந்த மேடை அமைக்கப்பட்டிருந்தது.

சந்தேக நபரான இளைஞனின் நடத்தையை கண்காணித்த பின்னர் அவரைக் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுளள்னர்.

அவர் பதுளை பகுதியை சேர்ந்தவர் எனவும் தற்போது வெள்ளவத்தை – கிருலப்பனையில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் பிலியந்தலை பகுதியில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி கலந்து கொள்ளவிருந்த மே தினக் கூட்டத்தை மேடை மிகவும் ஆடம்பரமாக இருந்ததால் தான் படம் பிடித்ததாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version