tamilni 101 scaled
இலங்கைசெய்திகள்

தேர்தல்களுக்கு தமிழரசுக்கட்சி தயார்: சாணக்கியன்

Share

எந்த தேர்தலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – செட்டிபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி அவர் விரும்பிய அனைத்து சட்டமூலங்களையும் மொட்டு கட்சியினரை வைத்து செயற்படுத்தி கொள்கின்றார்.

இந்த வகையில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு விடயத்திலும் அரசியலமைப்பில் செய்ய வேண்டிய திருத்தங்களையும் அவர் கடந்த காலங்களில் செய்திருக்கலாம்.

அவை ஒன்றையும் செய்யாமல் மீண்டும் ஜனாதிபதியாக வந்து இரண்டு வருடத்தில் தீர்வுகளை பெற்றுத்தருவதாக கூறுவதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்படுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடாத்தப்படுமா என்பது ஜனாதிபதிக்கு மட்டுமே தெரியும்.

எந்த தேர்தல் முதலில் நடைபெற்றாலும் அதை எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...