இலங்கைசெய்திகள்

புத்தாண்டை கொண்டாட தயாராகும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை

24 661097d346991
Share

புத்தசாசன, கலாசாரத்திற்கு எதிரான விடயங்கள் மற்றும் விளையாட்டுக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில்(New Year Celebration) இடம்பெற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க(Vidura Wickramanayake) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் நெறிமுறைகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று(5) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவது தொடர்பிலான ஆலோசனைகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை புத்தாண்டு கொண்டாட்டங்களில் உள்ளடங்கிய அம்சங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டு அவை பதிவு செய்யப்படுவதுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டும் என புத்தசாசனம், சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் கே. டி.ஆர். நிஷாந்தி ஜயசிங்க(K. DR. Nishanthi Jayasinghe)குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது புத்தசாசன, கலாசாரத்திற்கு எதிரான விடயங்கள் மற்றும் விளையாட்டுக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு, தற்போதுள்ள சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...