DSC01852
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தலவாக்கலை தீ விபத்தில் கடை நாசம்!

Share

தலவாக்கலை நகரில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்து வந்த கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது எனத் தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தீ விபத்து நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்டுள்ளது எனப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

தலவாக்கலைப் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உதவியாளர் கடையில் இல்லாதபோதே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயால் மரக்கறி மற்றும் பழங்கள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன.

எனினும், தீ விபத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தலவாக்கலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...