குரங்குகள் ஏற்றுமதி பொருத்தமில்லாத செயற்பாடு எனவும் அந்த முயற்சிகளை நிறுத்த வேண்டும் எனவும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான பொ. ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழில் ஊடக சந்திப்பொன்றை இன்று நடாத்திய அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயத்துறை சார்ந்த போதிய நிபுணத்துவம் இல்லாததாலேயே நாட்டில் விவசாயத்துறை பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குரங்குகளை ஏற்றுமதி செய்யாமல் ராஜபக்ச சகோதரர்களை மட்டுமல்ல ஆட்சியாளர்களையே சீனாவிற்கு நாடு கடத்த வேண்டும் – என்றார்.
#SriLankaNews

