நல்லூரில் வாள்வெட்டு! – இருவர் மருத்துவமனையில்

Screenshot 20220504 211930 Samsung Internet

நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக இன்று புதன்கிழமை இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.

3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தனர்.

கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும், சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகை தந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version