வவுனியாவில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை – சந்தேக நபர் கைது
வவுனியா (Vavuniya) – இளமருதங்குளம் பகுதியில் நேற்று மாலை வாளால் வெட்டி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமந்தை – காவல்துறை பிரிவுக்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் பழைய பகை காரணமாக ஐந்து பேர் கொண்ட குழு வவுனியாவிலிருந்து இளமருதங்குளம் பகுதிக்குச் சென்று அங்கு வசிக்கும் 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி கொலை செய்திருந்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூமாங்குளத்தை சேர்ந்த வாகன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா (Vavuniya) – ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வாள்வெட்டு சம்பவம் இன்று (01.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாவற்குளம் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய செல்வநிரோயன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டுவந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.