யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் வாள்வெட்டு கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
உடுவில் தெற்கைச் சேர்ந்த நாகராசா மணிமாறன் (வயது 51) என்பவரே காயமடைந்துள்ளார்.
குறித்த நபரின் வீட்டினுள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், அதைத் தடுக்க முற்பட்ட வீட்டு உரிமையாளர் மீது வாளால் வெட்டி விட்டுத் தப்பியோடியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மானிப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment