புதுவருடப்பிறப்பு தினத்தினை முன்னிட்டு சுழிபுரம் சவுக்கடி கடற்பரப்பில் நீச்சல் போட்டிகள் இன்று காலை சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு குணசேகரம் சர்மிலன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
சித்திரை புதுவருடபிறப்பினை முன்னிட்டு வருடா வருடம் சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தினால் விளையாட்டு நிகழ்வுகளும் போட்டிகளும் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வருடம் நீச்சல் போட்டி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் சுழிபுரம் சவுக்கடி கடற்பரப்பில் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு 40 கடற்றொழிலாளர்களுக்கென குறித்த நீச்சல் போட்டிகள் இடம்பெற்றது.
இதன்பொழுது குறித்த போட்டிக்கே விருந்திர்களாக பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா நந்தகுமார் ,கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் கடற்றொழில் பரிசோதகர் தயாளினி மைத்திரிரட்ணம், சங்கானை பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்கள் சிந்துஜன்,சிவரூபன் , விளையாட்டு உத்தியோகத்தர் கபிலன் ,மாதகல் அக்போ கடற்படை பிரிவின் பிரதான அதிகாரி ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு அ. சிவானந்தன் ,அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் க.குலசிங்கம்,கலைமகள் விளையாட்டு கழகத்தினர் ,கடற்றொழிலாளிகள் சமூக மட்ட அமைப்பினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
#SrilankaNews
Leave a comment