“நாடு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நிலையான ஆட்சி அவசியமாகும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தாம் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் சுமந்திரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வானொலி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
#SriLankaNews