சந்தேகத்துக்கிடமான விடுதிகள் யாழில் முற்றுகை!

யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதிகள் முற்றுகையிடப்பட்டது.

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் நடைபெறுகின்ற சமூக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நேற்றைய தினம் யாழ் மாநகர சபை அதிகாரிகளினால் திடீர் ப‌ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சில விடுதிகளில் சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இதில் சில விடுதிகளில் நடைபெற்ற முறையற்ற விடயங்கள் கவனத்திற்கு எடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

IMG 20220603 WA0026

#SriLankaNews

Exit mobile version