இலங்கையின் வெளிநாட்டு சேவை முடக்கம்

tamilni 316

இலங்கையின் வெளிநாட்டு சேவை முடக்கம்

அரசியல் நியமனங்களை நோக்காக கொண்டு, நீண்ட காலமாக ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், போதிய எண்ணிக்கையிலான தொழில் இராஜதந்திரிகள் இல்லாமல் இலங்கையின் வெளிநாட்டு சேவை முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட 268 பணியாளர்களுக்கு பதிலாக தற்போது 166 இராஜதந்திரிகள் மட்டுமே பணிகளில் உள்ளனர். அது போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்தநிலையில, தொழில் இராஜதந்திரிகளின் வெற்றிடங்கள் காரணமாக, இலங்கையில் உள்ள சுமார் 60 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் 22 பிரிவுகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் இந்தோனேசிய ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொழில் சேவையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் இல்லாமல் இயங்குவதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுச் சேவையும் பல தசாப்தங்களாக அரசியலாக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிடப்படுகின்றன.

தற்போது, வோசிங்டன் மற்றும் மொஸ்கோ போன்ற முக்கிய தலைநகரங்களுக்கு தொழில் அல்லாத தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும், அரசியல்வாதிகளின் உறவினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.

மேலும் சில பணிகளில் பணியாளர்கள் அதிகமாகவும், சில பணிகளில் ஆட்கள் குறைவாகவும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version