இடைநிறுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர் விநியோகம்!!

litro 1

நாடாளாவிய ரீதியில் தொடர் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் மறுஅறிவித்தல் வரும் வரையில் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நேற்று(02)  முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த காலங்களில் தொடர்ந்து எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையிலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நேற்று முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை சமையல் எரிவாயு விநியோகத்தை இவ்வாறு நிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் சரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறிவருகின்றன. நேற்றும் பல இடங்களில் சம்பவங்கள் பதிவாகின.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே லிட்ரோ கேஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version