இன்று காலை திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோன்றிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 45 இலிருந்து 65 வயது மதிக்கத்தக்க தோப்பூர், கந்தளாய் மற்றும் ஈச்சிலம்பற்றை சேர்ந்தவர்கள் என்று ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெருகல் மாவடிச்சேனை பகுதி வீடொன்றில் புதையல் தோண்டிய போது வெருகல் பகுதி இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட இடத்திலிருந்து 2 மண்வெட்டிகள், இரண்டு சவல், அலவாங்கு, கேன் போத்தல், தாச்சி, பிக்காசு, பானை மற்றும் இரண்டு சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளும் பொலிஸார் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
SriLankaNews