25 684a8da019cfb
இலங்கைசெய்திகள்

நீதிமன்றத்தை ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்! பசிலால் அரசாங்கத்துக்கு பெரும் சிக்கல்

Share

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகச வெளிநாட்டுக்கு சென்றபோது தான் அவரை எதிர்த்ததாகவும், அவர்களை போன்ற குற்றவாளிகளிகளை தற்போது நாட்டுக்கு அழைத்து வருவது சாத்தியமில்லாத விடயம் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணைளார் நாயகம் துஷார உப்புல்தெனிய நேற்று (11) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது நாட்டை விட்டு தப்பிச்சென்றதாக கூறப்படும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நபர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தை ஆச்சரியப்படுத்தும் தகவல்களை முன்வைக்கத் தயாராக இருப்பதாக திலீப பீரிஸ் கூறியுள்ளார்.

இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வெளிப்படுத்திய கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன,

“அரசியலமைப்பின் கீழ் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அதன் கீழ், நான்கு வகை குற்றங்களில் ஈடுபட்ட நபர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியும்.

நிதி மோசடி தொடர்பாக மே (02) அன்று அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அதுல திலகரத்ன என்ற நபருக்கு இரண்டு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராதத்தை செலுத்தத் தவறியதால், அனுராதபுரம் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை விளக்கமறியலில் வைத்து, தொடர்புடைய அபராதத்தை இழப்பீடாக வசூலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, மே (02) அன்று சிறையில் அடைக்கப்பட்ட இந்த குற்றவாளி, மே (12) அன்று ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்படுவார். இப்போது அந்த நபர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எப்படி நடக்கும்? அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர், வெசாக் தினத்தில் வழங்கப்படும் பொது மன்னிப்புக்காக இந்த சந்தேக நபருடன் சேர்த்து 37 நபர்களின் பெயர்களை தயார் செய்துள்ளார்.

ஆனால் இந்த சந்தேக நபர் 36 கைதிகளின் பெயர்களை மட்டுமே ஜனாதிபதிக்கு மன்னிப்புக்காக அனுப்புகிறார். அவர் ஒரு பெயரைக் குறைவாக அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு, இந்த சந்தேக நபர் அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு, ஜனாதிபதி 37 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ஏன் அவ்வாறு செய்தார் என்ற கேள்வி எழுகிறது.

அனுராதபுரத்திலிருந்து ஒரு கைதி அல்ல, 03 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற நம்பகமான தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.

இவை குறித்து நாங்கள் முழு விசாரணை நடத்தி வருகிறோம். நாட்டில் உள்ள அனைத்து சிறை கண்காணிப்பாளர்களிடமும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.

​​தனித்தனி வழக்குகளை விசாரித்து, இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகள் எடுக்கப்படும்போது, குற்றவாளிகளை மன்னித்து வீட்டிற்கு அனுப்புகிறார்கள்.

இந்த சந்தேக நபரின் தலைமையில் இவை அனைத்தும் நடக்கின்றன. அவருக்குத் தெரியாமல் இதுபோன்ற வேலைகளைச் செய்ய முடியாது.

குறித்த சந்தேகநபர் குற்றங்களின் அடிப்படையில் கைதிகளை விடுதலைக்கு பரிந்துரைத்தாரா? அல்லது அவர்களால் கிடைக்கப்பபெற்ற நன்மைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்களா?

வெசாக் அன்று உண்மையில் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் விடுவிக்கப்படவில்லை, ஏனெனில் இந்த நபர்களின் பெயர்கள் அனுப்பப்படவில்லை. எண்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. எனவே, நாங்கள் அதையும் விசாரித்து வருகிறோம்.

இங்கு ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். சிங்கப்பூரின் தீர்ப்புகள் எங்கள் நாட்டிற்குப் பொருந்தாது. இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அதிநவீன குற்றவாளிகள் உள்ளனர்.

அவர்கள் தப்பித்தால், அவர்களை மீண்டும் பிடிக்க முடியாது. பசில் ராஜபக்ச என்ற நபர் வெளிநாடு சென்றபோது அதை நான் எதிர்த்தேன். அவர் ஒரு சக்திவாய்ந்த அமைச்சர். இப்போது அவரை வெளிநாட்டிலிருந்து அழைத்து வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது போலவே பொதுமன்னிப்பு வழக்கில் ஒக்டோபஸ் போல முக்கிய நபர் ஒருவர் இருந்தாலும், அவரது நிழல் எங்கும் பரவியுள்ளது. எனவே, அத்தகையவர்களை இலகுவாக நடத்த முடியாது.

இது தொடர்பில் அடுத்த இரண்டு வாரங்களில் உங்களை கற்பனைக்கு எட்டாத வகையில் ஆச்சரியப்படுத்தும் தகவல்களை விசாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்று நம்புகிறோம். ” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...