download 7 1 13
இலங்கைசெய்திகள்

மர்ம பொதியால் அதிர்ச்சி!

Share

வெளிநாட்டிலிருந்து  இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றில்  இருந்து பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கனடாவில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மற்றுமொரு நபருக்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய 2 மரப்பெட்டிகளை சோதனையிட்ட போது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட சுமார் 12 கிலோ குஷ் போதைப்பொருள் இவ்வாறு  கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பேலியகொடையில் அமைந்துள்ள காகோ நிறுவனம் ஒன்றின் ஊடாக அனுப்பப்பட்ட 2 மரப்பெட்டிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது  மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோகிராம் குஷ் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த மரப்பெட்டிகளில் 24 பொதிகளில் குஷ் போதைப்பொருள் இருந்ததாகவும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிக்க பொருட்களின் உரிமையாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்துடன் ஒருவரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாகவும், இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 84 மில்லியன் ரூபா எனவும் சுங்கம் தெரிவித்துள்ளது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...