ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும், வடமாகாண சபையின் முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெறவுள்ளார்.
மொட்டு கட்சியின் தேசிய மாநாடு, விரைவில் நடைபெறவுள்ளது.
இதன்போது அக் கட்சியுடன் சங்கமிக்கும் சுரேன் ராகவனுக்கு பதவியொன்றும் வழங்கப்படவுள்ளது.
சுதந்திரக்கட்சியில் அங்கம் வகித்தாலும் ஆளுங்கட்சி பக்கம் தாவியதால், அவரின் கட்சி உறுப்புரிமையை சுதந்திரக்கட்சி இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews