” சர்வகட்சி இடைக்கால அரசில் பிரதான எதிர்க்கட்சியும் இணைய வேண்டும் என்பதேயே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விரும்புகின்றது.” – என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சீர்செய்வதற்காக மகாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுடன் நாம் உடன்படுகின்றோம். பிரதமரும் தற்போதைய அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். புதிய பிரதமரின்கீழ்தான் இடைக்கால அரசு அமைய வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும்.” – என்றார்.
#SriLankaNews