ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகளும் ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளன.
எனவே, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#SriLankaNews