விமல் வீரவன்ஸ உதய கம்மன்பில வாசுதேவ நாணயக்கார
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கு ஆதரவாம்! – 40 எம்.பிக்கள் குழு அதிரடி

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, இடைக்கால அரசு அமைக்கப்படவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீனக் குழு கவனம் செலுத்தியுள்ளது என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் கட்சியினர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பிக்களே இவ்வாறு தீர்மானித்திருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

அந்த சுயாதீனக் குழு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையுமாயின், இடைக்கால அரசை நிறுவுவது தொடர்பான திட்டங்கள் குறித்தும் அந்தக் குழு கலந்துரையாடியுள்ளது என்றும் தெரியவருகின்றது.

இடைக்கால அரசின் அமைச்சரவை 20க்கு கீழ் மட்டுப்படுத்திக்கொள்வது குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...