மைத்திரி, தயாசிறிக்கு அழைப்பாணை

image 3d6638530b

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கான நோட்டீஸ் பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், இன்று (13) உத்தரவிட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பதவிகளில் இருந்து தன்னை நீக்கியமையை சவாலுக்கு உட்படுத்தி துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனு தொடர்பில் விளக்கமளிப்பதற்கே இருவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version