தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஏர்பூட்டி வயல் உழுது விவசாயம் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள தனது பூர்வீக வயலில் ஏர் பூட்டி வயல் உழுது விதை விதைத்துள்ளார்.
விவசாயிகளின் உரப் பிரச்சினை மற்றும் இரசாயன உரம், விவசாய இரசாயனப்பொருள் பற்றாக்குறை போன்றவற்றால் நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
பெரும்போக விதைப்பு தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிட்டவில்லை.
இதனை அரசுக்கு வெளிச்சமிட்டு காட்டும் வகையில் சம்பிரதாயபூர்வமாக எம்.ஏ.சுமந்திரன் விவசாயிகள் சார்பில் குரலெழுப்பியுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து விவசாயிகள் சார்பில் சுமந்திரன் தொடர்ந்தும் குரல் எழுப்புவார் என அவரது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.