17
அரசியல்இலங்கைசெய்திகள்

சாத்வீக மற்றும் இராஜதந்திர வழியில் போராட வேண்டும்: தமிழரசுக் கட்சி பொதுச்செயலாளர் சுமந்திரன் அழைப்பு!

Share

எங்களுடைய இலக்குகளை அடைவதற்கு சாத்வீக ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் போராட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சியை பலப்படுத்துவதற்கு எங்களுடன் கைகோருங்கள் என அவர் மேலும் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் அடம்பன் பகுதியில் நேற்று (28.02.2026) நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் கட்சி எவ்வாறான முடிவுகளை செயல்படுத்த உள்ளது என்பது தொடர்பாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெளிவுபடுத்தினார்.

தழரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...