sumanthiran 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டம் நடத்தப்பட வேண்டும்! – சபாநாயகருக்கு சுமந்திரனும் அழுத்தம்!

Share

“கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை போன்று, இன்று உரிய நேரத்தில், இணையவழி முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சபாநாயகர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ருவிட்டர் பதிவொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை, நாடாளுமன்றத்தை விசேடமாக கூட்டாதிருக்க தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் நாட்டின் நிலைமை என்பன தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டமும் இரத்துச் செய்யப்படுவதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி சபாநாயகரால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்றுத் தெரிவித்திருந்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும் எனவும் சபாநாயகர் முன்னதாகக் கூறியிருந்தார்.

எவ்வாறிருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை, நாடாளுமன்றத்தை விசேடமாக கூட்டாதிருக்க தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்றிரவு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே இன்று இணைய வழியில் கட்சித் தலைவர் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...