tamilni 307 scaled
இலங்கைசெய்திகள்

சரத் வீரசேகரவின் மீது கடும் நடவடிக்கைக்கு சுமந்திரன் கோரிக்கை!

Share

சரத் வீரசேகரவின் மீது கடும் நடவடிக்கைக்கு சுமந்திரன் கோரிக்கை!

முல்லைத்தீவு நீதவானை தனிப்பட்ட முறையில் மோசமாக நாடாளுமன்றத்தில் விமர்சித்ததன் மூலம் நாடாளுமன்றத்தின் கௌரவத்தைக் கீழ்மைப்படுத்தி மிக மோசமாக நடந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராகச் சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சரத் வீரசேகரரின் நேற்றைய உரையையொட்டி இன்று(23.08.2023) நாடாளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றைக் கிளப்பி சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனவாதக் கருத்து
“சரத் வீரசேகர இரண்டாவது தடவையாக இப்படி மோசமான உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றார்.

இந்த நாட்டைச் சேர்ந்த சிங்கள மகனாகிய எனக்கு தமிழ் நீதிபதி ஒருவர் எப்படி உத்தரவிட முடியும் என்று இனவாதப் போக்கில் அவர் இந்தச் சபையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

அவர் நேற்று இந்தச் சபையில் பேசும்போது முல்லைத்தீவு நீதவானின் செயற்பாட்டைக் குறிப்பிட்டு, அவரது தனிப்பட்ட நடவடிக்கையாக அதை விமர்சித்து, அவரை ஒரு மனநோயாளி எனவும், அவரது மனைவி பற்றியெல்லாம் பிரஸ்தாபித்து, மிக மோசமான உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றார்.

இது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 83 ஆம் பிரிவை மீறும் செயல்.

ஒரு நீதிபதி நீதி நிர்வாக விடயத்தையொட்டி மேற்கொள்ளும் நடவடிக்கையைத் தனிப்பட்ட செயற்பாடாக விமர்சிக்க முடியாது.

ஒரு காத்திரமான பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து அனுமதி பெற்ற பின்னரே, அப்படியான விடயத்தை விமர்சித்து விவாதிக்க முடியும். இது, இரண்டாவது தடவை அவர் மேற்கொள்ளும் இத்தகைய மோசமான செயற்பாடு.

முதல் தடவை அவர் இதனைச் செய்த போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்றவை கடுமையாக ஆட்சேபித்தன. அச்சமயத்தில் நான் இங்கு ஏற்கனவே ஆற்றிய உரை ஒன்றை அவர் ஆதாரம் காட்டி, நானும் அப்படி நடந்து கொண்டேன் என்று சமாதானம் கூற முற்பட்டார்.

என்னுடைய உரை வித்தியாசமானது. நான் நீதிமன்றம் ஒன்றின் விசேட தீர்மானத்தை விமர்சித்தேன்.

நான் எந்த நீதிபதியின் பெயர் குறிப்பிட்டோ அல்லது அவரின் நடவடிக்கை குறித்தோ விமர்சிக்கவில்லை. நீதிமன்றங்களின் தீர்மானங்கள், முடிவுகள் இந்தச் சபையில் மட்டுமல்ல, சபைக்கு வெளியிலும் பகிரங்கமாக விமர்சிக்கப்படலாம்.

அதில் நீதிமன்ற அவமதிப்பு எதுவும் இல்லை. இரண்டு தடவைகளும் அவர் (சரத் வீரசேகர) நீதிபதியின் செயற்பாட்டைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்திருக்கின்றார்.

இந்த நாட்டைச் சேர்ந்த சிங்களவளான எனக்கு, தமிழ் நீதிபதி எப்படி உத்தரவிட முடியும் என்று அவர் இங்கு கூறியிருக்கின்றார்.

அந்த நீதிபதி மனநோயாளி என்று விமர்சித்திருக்கின்றார். இது மிக மிக மோசமான உரிமை மீறலாகும்.

இது வெறுமனே நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளை மீறும் செயல் மட்டுமல்ல, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மிக மோசமான மனித ஒழுக்க மீறல் நடவடிக்கையுமாகும்.

அத்தோடு இந்தச் சபையின் உயர் கௌரவத்தைக் கேவலப்படுத்தி, கீழ்மைப்படுத்தும் செயற்பாடும் கூட. இந்த விடயத்தில் சபாநாயகரின் கடும் நடவடிக்கை அவசியம்.

அவரது உரை ‘ஹன்சாட்’ பதிவில் இருந்து நீக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல. இந்தச் சபையின் சிறப்புரிமையை இத்தகைய மோசமான நடவடிக்கை மூலம் மீறியமைக்காக அவர் மீது சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....