23 6574757d44284
இலங்கைசெய்திகள்

மின்தடையால் இருளில் மூழ்கிய இலங்கை! புதிய அறிவித்தலை வெளியிட்ட மின்சார சபை

Share

மின்தடையால் இருளில் மூழ்கிய இலங்கை! புதிய அறிவித்தலை வெளியிட்ட மின்சார சபை

நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின்விநியோகம் இன்று இரவு 10 மணியளவில் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கொத்மலையில் இருந்து பியகம வரையான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுதும் ஏற்பட்ட பரவலான மின்வெட்டு காரணமாக இணைய இணைப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...