இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 8205 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 7702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இம்மாதம் இதுவரையில் 503 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 2030 ஆகும்.
கொழும்பு மாநகரசபைப் பகுதியில் மாத்திரம் 664 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதன் பின்னர் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 1555 ஆகும்.
அதன் பின்னர் களுத்துறை மாவட்டத்தில் 644 நோயாளர்கள், குருநாகல் மாவட்டத்திலிருந்து 522 நோயாளர்கள் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் இருந்து 521 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
#srilankaNews
Leave a comment