சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசேட குழுவின் அறிக்கை இன்று நுகர்வோர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தெரிவித்தார்.
12 எரிவாயு மாதிரிகள் தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக் காலமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவாகி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை முன்வைப்பதற்காக எட்டு பேர் அடங்கிய விசேட குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment