கடந்த இரு வருடங்களாக மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.
கொவிட் தொற்றை அடுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் கடந்த இரண்டு வருடங்களாக திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கையில் பதாகைகளை ஏந்திய வண்ணம், சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
#SriLankaNews
Leave a comment