பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மே 17 வரை இடைநிறுத்தம்!

5 e1651778572884

நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டம் இன்று மாலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நேற்று மாலை ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்த மாணவர்கள் நாடாளுமன்றத்தின் நுழைவுப் பகுதியான பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்பின்னர், அங்கு ‘ஹொரு கோ கம’ எனும் பெயரில் மாதிரிக் கிராமம் அமைத்து மாணவர்கள் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில், இன்று மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்

அத்துடன் மாணவர்கள் பொலிஸாரின் தடைகளை மீறி நாடாளுமன்ற வளாகத்துக்குள் பிரவேசிக்க முற்பட்டபோது, அதைத் தடுப்பதற்காகப் பொலிஸாரால் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு மற்றும் நீர்த்தரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அதேநேரம், நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பிற்போடப்பட்ட நிலையில், மாணவர்களும் தங்களது போராட்டத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் தற்காலிமாகக் கைவிடத் தீர்மானித்தனர்.

#SriLankaNews

 

Exit mobile version