யாழ்ப்பாணம், பண்டத்தரிப்புப் பகுதியில் சுவாமிப் படத்துக்கு விளக்கேற்றிய தீக்குச்சியை எறிந்தபோது அறையில் வைத்திருந்த பெற்றோல் மீது அதுபட்டுத் திடீரெனத் தீப்பற்றியதில் 17 வயது மாணவி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்வி பயிலும் சுதர்சன் சுதர்சிகா என்னும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாங்கிச் சேமிக்கப்பட்ட பெற்றோல் நிரப்பிய கான்கள் சாமி அறையில் வைக்கப்பட்டிருந்தன. வழக்கம் போல் அந்த மாணவி சாமி அறையில் விளக்கேற்றி விட்டு தீக்குச்சியை கீழே வீசியுள்ளார். அதிலிருந்து பறந்த தீப்பொறி பெற்றோல் மீது பட்டு வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.
உயிரிழந்த மாணவியின் உடல் சங்காணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தீப்பற்றிய வீட்டை மூடியுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

#SriLankaNews
Leave a comment