ராஜபக்ச அரசுக்கு எதிராகவும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி கோரியும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை ஆகிய பகுதிகளையும் முடக்கி அரசுக்கு எதிராக இன்று பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment