மனித கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எச்சரிக்கை
மனித கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஸ்திரமான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் இன்று (15) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய – உக்ரைன் போருக்கு ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை கூலிப்படையாக பயன்படுத்தி மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.